மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவில் தைப்பூச தேரோட்டம், வரும், 5ம் தேதி நடக்கிறது.
சேலம்--- நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வரும், 5ம் தேதி தைப்பூச தேரோட்ட விழா நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.
பிப்.,2, 3ம் தேதிகளில் பகல்,1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 4ம் தேதி பகல் ஒரு மணிக்கு சுவாமிக்கு, சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும், இரவு, 10:00 மணிக்கு, திருக்கல்யாண வைபோகம், சுவாமி திருத்தேருக்கு புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். 5ம் தேதி மதியம், 2:45 மணிக்கு, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் இளையராஜா முன்னிலையில் திருத்தேர் வடம் பிடிக்கப்படும். 6ம் தேதி சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும், 7ம் தேதி காலை, 3:00 மணிக்கு சத்தாபரண மகாமேருவும் நடைபெறும். 8ம் தேதி வசந்த விழாவுடன் திருவிழா முடிவடைகிறது.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் மணிகண்டன், பரம்பரை அறங்காவலர் அம்பிகாதேவி செய்துள்ளனர்.