புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,
அரசின் குறிப்பிட்ட துறைகளின் டிஜிட்டல் அமைப்புகளின் டிஜிட்டல் அமைப்புகளின் பொதுவான வணிக அடையாளமாக பான் அட்டை பயன்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த தகவல் சேகரிப்பு முறைகளின் அமைப்பு உருவாக்கப்படும். இதன்மூலம் ஒரு பொதுவான போர்ட்டல் மூலம் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தகவல் பெற முடியும். அதேபோல், ஆதார் மற்றும் டிஜிலாக்கர் பொதுவான அடையாளமாக பயன்படுத்த முடியும்.

வங்கிகளின் கேஓய்சி நடைமுறை எளிமையாக்கப்படும். சிறு குறு தொழில்நிறுவனங்களுக்கு என தனி டிஜிலாக்கர் முறை உருவாக்கப்படும். இந்தியா முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.