நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரம்பட்டி மஹா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
நல்லம்பள்ளி அடுத்த, தண்டுகாரம்பட்டி மஹா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, விக்னேஸ்வர பூஜை, பஞ்ச காவ்யம், சர்வதேவதா அனுக்ஞை நவகிரக ஹோமம், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஹோமம் மற்றும் கஜ பூஜை நடந்தது. மாலை முதல்கால யாகபூஜையும், வேதபாராயணமும் நடந்தது. நேற்று காலை, இரண்டாம்கால யாகபூஜையும், பகலில் சுமங்கலி பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடந்தன.
மாலையில், மூன்றாம் காலயாக பூஜையும், 108 விசேஷ திரவிய ஹோமமும் நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு மேல் இக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
நடக்கிறது.