புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்
* நகர்ப்புற வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி நிதி
*கர்நாடகாவிற்கு சிறப்பு நிதியாக ரூ.5,300 கோடி
*பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 3 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி
*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79 ஆயிரம் கோடி
*வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கு இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக அதிகரிப்பு
*பல்வேறு துறைகளில் மூலதன முதலட்டு தொகை ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.
*போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி
*சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை எரிசக்திக்கு மாற ரூ.35 ஆயிரம் கோடி
*தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு ரூ.2,200 கோடி

*ரூ.7000 கோடி மதிப்பில் இணையதள நீதிமன்றங்கள்
*தேசிய பசுமை ஹைட்ரஜ்ன மிஷன் திட்டத்திற்கு ரூ.19700 கோடி
*சிறுகுறுதொழில்கள் துறைக்கு ரூ.9 ஆயிரம் கோடி
*7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்
*ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி
*அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு
*நிதி பற்றாக்குறை 6.4 சதவீதம்
*நொடிந்து போகும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க தனி நிதி