குளித்தலை: தோகைமலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தோகைமலை யூனியன் அலுவலகம் அருகே நடந்த ஆர்பாட்டத்துக்கு, வட்டார தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையாளர் சங்கர், இணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் கலந்து கொண்டு பேசினார்.
இதில், உதவி இயக்குனர், இணை இயக்குனர், உதவி செயற்பொறியாளர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை வெளியிடுதல், பஞ்., செயலர்கள் நிலைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்புதல், பஞ்., செயலர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளான தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்குதல், துாய்மை பாரத இயக்க வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல், கணினி இயக்குபவர்களுக்கு பணிபாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி பழனி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.