கரூர்,: கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பாலவிடுதியில் 21.10 மி.மீ-., மழை பெய்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மணடலத்தால், தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. கரூர் மாவட்டத்திலும், ஆங்காங்கே லேசான மழை பெய்தது-.
மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.,) குளித்தலை, 4, கிருஷ்ணராயபுரம், 6, மாயனுார், 10, பஞ்சப்பட்டி, 16.4, கடவூர், 8.5, பாலவிடுதி, 21.10, மயிலம்பட்டி, 6.4 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 6.3 மி.மீ., மழை பதிவானது.
அமராவதி ஆற்றில், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 10 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது.
காவிரி ஆற்றில், மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,485 கன அடி மட்டுமே தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், அப்படியே திறந்துவிடப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
Advertisement