கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில் வார்டு பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சுய உதவிக்குழுவினர் மூலம் மேற்கொள்வது, குப்பைகளை தரம் பிரித்து, வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு சென்று, உரம் தயாரிக்கும் பணியில் சுய உதவிக்குழுவினரை அனுமதிப்பது, குடிநீர் திட்ட பராமரிப்பு பணி, மின்மோட்டர் பழுது பார்த்தல் பணி, தெரு விளக்கு பராமரிப்பு பணி உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யுவராணி, துணை தலைவர் வளர்மதி, வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement