கிருஷ்ணராயபுரம்: மாயனுார் கதவணையில், மீனவர் வலையில் 6 கிலோ எடை கொண்ட, ரோகு கெண்டை வகை மீன் சிக்கியது.
கிருஷ்ணராயபுரம் அருகே மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணை பகுதியில் சேகரமாகும் தண்ணீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, பிடித்து வந்து விற்று வருகின்றனர்.
நேற்று காலை நல்லு என்ற மீனவர், பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது வலையில், 6 கிலோவுக்கு மேல் எடை கொண்ட, ரோகு கெண்டை மீன் சிக்கியது. அதிக எடை உடைய மீன் இப்பகுதியில் சிக்கியது இல்லை. நேற்று, இந்த மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், ரோகு கெண்டை மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்தது. இந்த மீன், கிலோ 200 ரூபாய் வீதம் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டது. ஜிலேபி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மொத்தமாக 200 கிலோ வரை மீன் விற்பனை நடந்தது.
Advertisement