பட்ஜெட் 2023

POWERED BY

எது கூடுது?... எது குறையுது?

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
புது டில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று(பிப்.,01) காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இதனால் எதற்கு வரி உயர்வு....எதற்கு வரி குறைவு..எந்த பொருட்கள் விலை குறையுது என்பது குறித்த விபரங்கள்: வரி உயர்வு: சிகரெட்களுக்கு கூடுதல்
Nirmala Sitharaman, Budget 2023, UnionBudget2023, மத்தியபட்ஜெட்2023,    நிர்மலா சீதாராமன், பட்ஜெட்2023, Budget,

புது டில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று(பிப்.,01) காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனால் எதற்கு வரி உயர்வு....எதற்கு வரி குறைவு..எந்த பொருட்கள் விலை குறையுது என்பது குறித்த விபரங்கள்:


வரி உயர்வு:



latest tamil news



சிகரெட்களுக்கு கூடுதல் வரி:


* 2023-2024 பட்ஜெட்டில் சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், இதன் மீதான வரி 16% வரை உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.


* இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப்பொருட்களுக்கு விலை உயர்வுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும்.



தங்கம், வெள்ளி, வைரம் விலை உயர்வு:


* தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.



latest tamil news


* இதனால் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர்வை ஏற்படுத்தும்.


* அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


* ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு. இதனால் ரப்பர் மற்றும் ஆடை கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


* ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


* சமையலறை மின்சார சிம்னிக்கான இறக்குமதி வரி உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.



வரி குறைப்பு:


கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.



latest tamil news


* இதனால் டிவி விலை குறையும். மேலும் செல்போன், கேமரா உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறையும். இது மக்களிடம் உபயோகப்படுத்தும் சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


* இறால் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்படும். இதனால் இறால் உணவு பொருட்கள் மக்களுக்கு மலிவாக கிடைக்கும்.


* தொலைக்காட்சி பேனல்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதம் குறைப்பு


* பயோ, எரிவாயுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


* சைக்கிள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களான பொம்மைகள் மற்றும் சைக்கிள் விலை குறைப்பிற்கு வழி வகுக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-பிப்-202308:21:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எது கூடுது?... எது குறையுது?... சீண்டுறதுக்குன்னே போட்ட தலைப்பு தானே இது? விலைவாசி கூடுது, வாங்குற சம்பளம் / வாங்கும் திறன் குறையுது. சரியா ? இதை தானே எதிர்பார்த்தீங்க?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
01-பிப்-202321:33:40 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் மக்களுக்குப் பொதுவா எல்லா விலைவாசியும் கூடுது,பர்ஸ் கனம் குறையுது .
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
01-பிப்-202321:06:26 IST Report Abuse
Sivagiri ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனம் வைத்திருப்பவர்களுக்கு - பெட்ரோல் வரியை டபுள் மடங்கு கூட்டலாம் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X