புது டில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று(பிப்.,01) காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதனால் எதற்கு வரி உயர்வு....எதற்கு வரி குறைவு..எந்த பொருட்கள் விலை குறையுது என்பது குறித்த விபரங்கள்:
வரி உயர்வு:

சிகரெட்களுக்கு கூடுதல் வரி:
* 2023-2024 பட்ஜெட்டில் சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், இதன் மீதான வரி 16% வரை உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப்பொருட்களுக்கு விலை உயர்வுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும்.
தங்கம், வெள்ளி, வைரம் விலை உயர்வு:
* தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும்.

* இதனால் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர்வை ஏற்படுத்தும்.
* அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு. இதனால் ரப்பர் மற்றும் ஆடை கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
* ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* சமையலறை மின்சார சிம்னிக்கான இறக்குமதி வரி உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு:
கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

* இதனால் டிவி விலை குறையும். மேலும் செல்போன், கேமரா உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறையும். இது மக்களிடம் உபயோகப்படுத்தும் சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* இறால் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்கப்படும். இதனால் இறால் உணவு பொருட்கள் மக்களுக்கு மலிவாக கிடைக்கும்.
* தொலைக்காட்சி பேனல்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதம் குறைப்பு
* பயோ, எரிவாயுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* சைக்கிள், பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களான பொம்மைகள் மற்றும் சைக்கிள் விலை குறைப்பிற்கு வழி வகுக்கும்.