திருப்பத்துார்: சுந்தரம்பள்ளி அருகே, மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், சுந்தரம்பள்ளி அருகே சாணிப்பட்டி கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தனபாக்கியம், 80. இவர் கணவர் சின்னப்பையின் இறந்து விட்டதால், அவரது நிலத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 26 ம் தேதி இரவு 11:00 மணிக்கு பைக்கில் வந்த இரண்டு பேர், தனபாக்கியத்தை கத்தியை காட்டி மிரட்டி, அனவர் காதை அறுத்து ஒரு பவுன் கம்மலை பறித்துச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த அவர் திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கந்திலி போலீசார் வழக்கு பதிந்து, அந்த பகுதியிலிருந்த கேமராவை ஆய்வு செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கொண்ணம்பட்டி புதுார் பகுதியை சேர்ந்த வழிப்பறி திருடர்களான விஜய், 20, திருப்பத்துார் மாவட்டம், திருமால்நகரை சேர்ந்த முருகன், 42, ஆகியோரை இன்று கைது செய்து, ஒரு பவுன் கம்மலை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement