சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.,27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தனது ஆதரவாளராக செந்தில் முருகன் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
பின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ., ஆதரவாளர்கள் அறிவித்தால், எங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவோம். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் ஆதரவு கேட்டுள்ளோம். தேர்தல் ஆணையத்தின் படி நான் தான் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். பொதுக்குழு வழக்கு தொடர்பான வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தென்னரசுவை, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.