வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்று, தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா இன்க்(India Inc)

நாட்டை கட்டமைப்பதற்கான பாதையை ஏற்படுத்தி உள்ளதுடன். வளர்ச்சியை மையமாக கொண்டு பட்ஜெட் அமைந்துள்ளது.
சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்ரஜித் பானர்ஜி
வளர்ச்சிக்கான பட்ஜெட் இது. வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் ஆனது 2047 ல் வளர்ந்த நாடு என்ற கொள்கைக்கு வலிமையான அடித்தளமாக அமைந்துள்ளது.
எப்ஐசிசிஐ தலைவர் சுப்ரகாந்த் பாண்டா
வளர்ச்சிக்கான சுழற்சியை இயக்கத்தில் வைத்திருக்க முதலீடு மற்றும் நுகர்வுக்கான உந்துதல் தேவை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதத்தை குறிக்கும் வகையில் , மூலதன செலவினத்தை 33 சதவீதம் அதிகரித்து 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி, மூலதன செலவினத்தின் மீதான உத்துதலை அரசு தொடர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அசோசெம் வெளியிட்ட அறிக்கை
உள்கட்டமைப்பு நிலையான பொருளாதார வளர்ச்சி, நுகர்வு தேவையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டை கட்டமைக்க முடியும்.
மூலதன செலவை 33 சதவீதம் அதிகரித்து, ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தியிருப்பது, சர்வதேச அளவில் மந்த நிலையிலும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மீதான அரசின் உறுதியை எடுத்து காட்டுகிறது.
கோடக் மகேந்திரா வங்கி சிஇஓ உதய் கோடக்
தொலைநோக்கு பார்வை மற்றும் முறைபடுத்தப்பட்ட பட்ஜெட் ஆக அமைந்துள்ளது. தனிநபர்களுக்கு உதவும் வகையிலும் உள்ளது. அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில், ஒவ்வொரு இந்தியரின் தனி நபர் வருமானத்தையும் அதிவேகமாக இரட்டிப்பாக்க அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கோத்ரேஜ் மற்றும் பாய்கோ நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ அனில் ஜி வர்மா
5ஜி சேவைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மூலம் உலக பொருளாதாரத்தில் நமது போட்டித்தன்மை மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.