சென்னை: பேனா சிலை உடைக்கப்பட்டால் எங்கள் கைகள் பூப்பறித்து கொண்டிருக்குமா என நாம் தமிழர் சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி தந்தார்.
![]()
|
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய சேவையை பாரட்டி சென்னை மெரினா கடல்பகுதியில் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் வைக்க ஆளும் தி.மு.க., அரசு முடிவு செய்திருந்தது. மத்திய சுற்றுசசூழல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளித்தது. இதனையடுத்து அனைத்து கட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் ஒன்றிற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அழைப்பு விடுத்திருந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் கடலுக்குள் பேனா சிலை வைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு வரும். 8551.13 சதுர மீட்டர் அளவில் நினைவு சின்னம் அமைப்பதற்காக கல் மற்றும் மண்ணை கொட்டினால் அழுத்தம் ஏற்படும். இதனால் அப்பகுதியில் உள்ள பவளப்பாறைகள் பாதிக்கப்படும். வேண்டுமானால் அறிவாலயத்தில் வைத்துகொள்ளுங்கள்
மேலும் பள்ளிக்கூடங்களை சீரமைக்க நிதி இல்லை என்கிறீர்கள் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வைத்தால் அதை நான் உடைப்பேன் என காட்டமாக கூறினார். சீமானின் கருத்து அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
![]()
|
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு சீமானின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேனா சிலையை உடைத்தால் எங்கள் கைகள் பூப்பறிக்குமா அவருக்கு மட்டும் தான் கைகள்இருக்குமா எங்களுக்கு கைகள் இல்லையா என கேள்வி கேட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement