மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன மாதிரியான பட்ஜெட் தாக்கல் செய்ய போகிறார் என ஒரு பெருங்கூட்டம் எதிர்பார்த்திருந்த வேளையில், அவர் பட்ஜெட் நாளனன்று என்ன வகையான புடவை அணிந்து வர இருக்கிறார் எனவும் சிலர் எதிர்பார்த்திருந்தனர். கர்நாடகாவின் தாரவாடாவில் இருந்து பரிசளிக்கப்பட்ட சிவப்பு நிற கைத்தறி இல்கல் பட்டுப் புடவையை இந்தாண்டு பட்ஜெட் தாக்கலுக்கு அணிந்திருந்தது கவனம் ஈர்த்துள்ளது.
நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக 2019ல் பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அழகான கைத்தறி புடவைகளை அணிந்து வருவார். இந்திய பாரம்பரிய உடைகளை விரும்பி அணியும் நிர்மலா சீதாராமன், கைத்தறி புடவைகளை ஊக்குவிக்க குரல் கொடுப்பவர். பட்டுப் புடவையோ அல்லது பருத்திப் புடவையோ, ஒரிசா கைத்தறி புடவைகள் அவரது விருப்பமானவற்றில் ஒன்று. அதன் நிறம், நெய்யப்பட்ட விதம், அமைப்பு அனைத்தும் சிறப்பாக இருக்கும் என ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கையால் நெய்யப்பட்ட பளிச்சிடும் சிவப்பு நிறப் இல்கல் பட்டுப் புடவையைத் தேர்வு செய்திருந்தார். இல்கல் என்பது கர்நாடகாவில் ஒரு ஊர். இந்தப் புடவையை கர்நாடகாவின் தாரவாடா தொகுதி எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷி அனுப்பியுள்ளார். 7 பிளைன் புடவைகளை அனுப்பியதில் இந்த சிவப்பு நிறப் புடவை மற்றொரு நீல நிறப் புடவையை நிர்மலா சீதாராமன் தேர்வு செய்திருந்தார். பிறகு எம்பிராய்டரி உள்ளிட்ட டிசைன்கள் போட்டு அவை அனுப்பப்பட்டது.
சிவப்பு நிற இல்கல் பட்டுப் புடவையில் நவலகுண்டா எம்பிராய்டரி செய்யப்பட்டது. சேலையில் மயில், தாமரை, தேர், கோபுர வடிவங்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளன.
Advertisement