கிணத்துக்கடவு : சிங்கராம்பாளையத்தில் நிழற்கூரை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட, சிங்கராம்பாளையம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வெளியூர் செல்ல பஸ் பயணத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
ஆனால், இங்குள்ள பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாததால் பயணியர் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், குப்பை தொட்டி பற்றாக்குறையால், குப்பைகள் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ளது.
இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைத்து, குப்பை தொட்டி அமைக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.