புதுடில்லி: டில்லி மாநகராட்சி மேயர், துணை மேயரை தேர்தல் மூன்றவாது முறையாக பிப்.06-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜன. 6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
![]()
|
அப்போது மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்கள் நியமனம், தேர்தல் நடத்தும் அவைத்தலைவர் நியமனம் ஆகியவற்றில், முதல்வர் கவர்னர் இடையே மோதல் போக்கு இருந்தது. இதையடுத்து டில்லி மாநகராட்சி அலுவலகத்தில் , பாஜ.,- ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜன. 24-ல் மேயர் மற்றும் துணைமேயர் தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது கடந்த முறை போல, பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. இதனால் மேயர், துணை மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் எப்போது நடக்கும் என பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் வரும் பிப்.6-ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆம் ஆத்மி கவுன்சிலர்களுடன் முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement