சென்னை: ஆறு மணி நேரத்தில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.என பா.ஜ., மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
![]()
|
பா.ஜ., மாநில தலைவர் புதுடில்லிபுறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 6மணி நேரத்தில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி நிர்வாகிகள் பேனரில் எழுத்துப்பிழை என்று கூறி இருக்கின்றனர். நாளை காலை வரை பொறுத்திருங்கள். அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கூறினார்.
![]()
|
முன்னதாக ஈ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்படும் போது அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களில் காலை வேளையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என்றிருந்தது. மாலை நேரத்தில் அவை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என மாறி இருந்தது.மேலும் இரண்டு பேனர்களிலும் பா.ஜ.,தலைவர்கள் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement