வேலுார்: தமிழ்நாட்டில் கல்வி புரட்சி நடந்த கொண்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
![]()
|
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் 80 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் 157 கோடி ரூபாய் மதிப்பில் பேர்ல் ஆராய்ச்சிக் கட்டடம் திறப்பு விழா நடந்தது.
வி.ஐ.டி., துணை வேந்தர் ராம்பாபு கோடாலி வரவேற்றார். வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது:
இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் வரிசையில் வி.ஐ.டி., 20 வது இடத்தில் உள்ளது.
சுயநிதி பல்கலைக்கழகங்கள் வரிசையில் இந்தியாவில் வி.ஐ.டி., முதலிடத்தில் உள்ளது.
கல்லுாரிகளை உருவாக்குவது சுலபம். தலைசிறந்த கல்லுாரியாக உயர்த்துவது கஷ்டம். குழந்தைகளின் பெயர்களை தமிழில் தான் வைக்க வேண்டும் என தொடர்ந்து விசுவநாதன் வலியுறுத்தி வருகிறார். அதைத்தான் நான் திருமண நிகழ்ச்சிக்கு போகிற போது சொல்கிறேன்.
கல்வித்துறையில் விசுவநாதன் சாதனைக்கு காரணம் அவரது வாரிசுகள் தான். ஆனால் அரசியலில் மட்டும் வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இளைஞர்கள் அறிவியல் சிந்தனையில் தலைசிறந்த ஆளுமை வளர்வதற்கு இது போன்ற ஆராய்ச்சி பூங்காக்கள், கல்லுாரிகளும், விடுதிகளும் ஏராளமாக தேவைப்படுகிறது. அவற்றை உருவாக்கும் அரசாகஇன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில் அவற்றை உருவாக்க அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் என்றால் அனைத்துதுறை, அனைத்து மாவட்டம், அனைத்து சமூதாயம் என இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. தொழில் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்கிறார்கள்.அதற்காகவே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் கடந்தாண்டு மார்ச் 1 ம் தேதி தொடங்கப்பட்ட நான் முதல்வர் திட்டத்தை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது.
அதே போலத்தான் உயர் கல்வி கற்று வரக்கூடிய கல்லுாரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இது போன்ற திட்டங்களினால் தமிழ்நாட்டில் மாபெரும் கல்வி புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது.பள்ளி கல்வியில் இடையில் நிற்கும் மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர தேவையான நடவடிக்கைகள் திராட மாடல் அரசு செய்கிறது.
உயர் கல்வியையும் தாண்டி ஆராய்ச்சிக் கல்வியும் வளர வேண்டும். அதை மேன்மேலும் வளர்ச்சி பெற தனியார் பங்களிப்பும் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு வி.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள் அரசுக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காமராஜர் ஆட்சியில் கல்வியிலும், கருணாநிதிஆட்சியில் கல்லுாரி கல்வியிலும் முன்னனேற்றமடைந்த நம்முடைய ஆட்சியில் ஆராய்ச்சிக் கல்வி சிறந்து விளங்கும்.
கல்வியை தான் யாராலும் திருட முடியாத சொத்து.
![]()
|
பலர் படிக்காமல் முன்னேறலாம் என பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் கட்டுக்கதைகள் கூறுவார்கள். ஆனால் மாணவர்கள் படித்து உலகளவில் உயர்வது இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை. சென்னை எப்படி மெடிக்கல் கேப்பிட்டல் என்பதை போல வேலுாரும் கேப்பிட்டல் ஆப் ரிச்சர்ஸ் என மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கைத்தறி துறை அமைச்சர் காந்தி, வி.ஐ.டி., துணைத் தலைவர்கள் சஙே்கர், சேகர், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் நன்றி கூறினார்.