வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டனில் ஊதிய உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுத்துறையின் பல்வேறு பிரிவு ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பிரிட்டனில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக பதவியேற்ற போது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே எனது முழு இலக்கு என ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார்.
![]()
|
இந்நிலையில் பிரிட்டனில் அரசு ஊழியர்கள், பல்கலை. பேராசிரியர்கள், ரயில் ஓட்டுனர்கள், கடைநிலை ஊழியர்கள் என அரசுத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஊதிய ஊயர்வு, வரன் முறை நிபந்தனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக அரசு பணிகள் ஸ்தம்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement