நிப்டி 50 குறியீட்டில் இந்த 5 பங்குகள் கடும் வீழ்ச்சி!

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
இந்தியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி 50 நண்பகல் வரை ஏற்றத்தில் நீடித்து, பின்னர் கடும் சரிவைச் சந்தித்து, சற்றே அதிலிருந்து ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.529 கோடிக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.1,785 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளனர்.இந்தியப் பங்குச் சந்தைகள் 2023 பட்ஜெட்ட்டால் ஈர்க்கப்படவில்லை. இன்ட்ராடேவில் 2% உயர்ந்த
Budget, StockMarket, adani, insuranceStocks

இந்தியப் பங்குச்சந்தை குறியீடான நிப்டி 50 நண்பகல் வரை ஏற்றத்தில் நீடித்து, பின்னர் கடும் சரிவைச் சந்தித்து, சற்றே அதிலிருந்து ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.529 கோடிக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.1,785 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளனர்.


இந்தியப் பங்குச் சந்தைகள் 2023 பட்ஜெட்ட்டால் ஈர்க்கப்படவில்லை. இன்ட்ராடேவில் 2% உயர்ந்த பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி 50 ஆகியவை பிறகு, சீராக முடிவடைந்தன. பட்ஜெட் அறிவிப்பில் எதிர்மறையான விஷயங்கள் எதுவும் இல்லை. மேலும் இது அடுத்த சில ஆண்டுகளுக்கு கேம் சேஞ்சர் பட்ஜெட்டாக இது இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், முதலீட்டாளர்கள் உற்சாகமடையவில்லை.


நாளைய வர்த்தகத்தில் அமெரிக்க பெடரல் கூட்டத்தின் முடிவுகளுக்கு சந்தைகள் எதிர்வினையாற்றும். 0.25% வட்டி உயர்வு இருக்கும் என கணித்துள்ளனர். நிப்டி 17550-க்கு கீழே முடிவடைந்தால் கரடிகள் பலமடைவார்கள் என்பது நிபுணர்கள் கருத்து. நிலைத்தன்மை ஏற்படும் வரை டிரேட்களை குறைத்துக்கொள்ள பலரும் பரிந்துரைக்கின்றனர்.


இந்நிலையில், பட்ஜெட் தினத்தன்று நிப்டி 50ல் அதிகம் சரிந்த 5 பங்குகள், ஏற்றம் கண்ட 5 பங்குகள் குறித்து பார்ப்போம்.


அதானி எண்டர்பிரைசஸ் 26.7% எனும் படுமோசமான சரிவைக் கண்டது. பிற்பகல் 1 மணிக்கு மேல் இந்த சரிவு அதிகரித்தது.


இதே நிலைமை தானி அதானி போர்ட்ஸ் பங்குகளுக்கும். அவை 17% மேல் சரிந்தன. ஹிண்டன்பர்க் அதானி நிறுவனங்களின் நிர்வாகம் குறித்து சந்தேகம் கிளப்பியிருந்ததை தொடர்ந்து இது நிகழ்கிறது.


latest tamil news

இன்சூரன்ஸ் ப்ரீமியங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் சென்றால் அதற்கு வரி பிடித்தம் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானதால், இன்சூரன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவைக் கண்டன.


அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் எச்.டி.எப்.சி., லைப் பங்குகள் 10.79%, எஸ்.பி.ஐ., லைப் பங்குகள் 8.61% சரிந்துள்ளன.


ஐந்தாவதாக அதிக சரிவைச் சந்தித்த பங்காக பஜாஜ் பின்சர்வ் உள்ளது. இதன் விலை 5.45% வீழ்ச்சி கண்டுள்ளது.



ஏற்றம் கண்ட டாப் 5 பங்குகள்


latest tamil news

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2.18% வளர்ச்சி


ஜெ.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் 2.09% உயர்வு


ஐ.டி.சி., - 2.06% உயர்வு


டாடா ஸ்டீல் - 1.96% உயர்வு


பிரிட்டானியா - 1.68% உயர்வு கண்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

RAMESH - chennai,இந்தியா
02-பிப்-202311:25:09 IST Report Abuse
RAMESH மோடிஜியின் வளர்ச்சியில் சூட்சமத்தையும் (unethical and dangerous practices) கடைபிடித்த BBC போல இந்த ஹின்டன்பர்க் நிறுவனத்தின் கருத்தின் பின்னணி மற்றும் மூல காரணங்கள் யார் யார் , எவ்வளவு கருப்பு பணம் கைமாறி உள்ளது இவை அனைத்தும் விரைவில் வெளிவரும். PEPSI, COCO COLA, COLGATE, GILLETTE, etc. etc. இவைகளுக்கு மக்கள் அடிமையாகி PATANJALI, KALIMARK இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வைத்தவர்கள் எவ்வளவு ஆதாயம் அடைந்து இருப்பார்கள் என்று நினைத்து பார்க்க கூட மூளை மழுங்கிவிட்டது இந்த அடிமைகளுக்கு . காலம் விரைவில் பதில் சொல்லும் . உண்மையே வெற்றி பெரும்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
02-பிப்-202314:31:52 IST Report Abuse
Barakat Aliஉண்மை வெற்றி பெறவேண்டும் என்றால் அதானி வெல்ல வாய்ப்பில்லை.. தோல் இருக்க சுளை முழுங்கும் ஆளு இந்த அதானி .........
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
02-பிப்-202300:52:23 IST Report Abuse
Priyan Vadanad இந்திய கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அடடாநீ குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கருத்து சொல்லியிருக்கிறது. இது தேசபக்தி, தேசத்துரோகம் என்றெல்லாம் சதா புலம்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். அவர்களால் நாட்டின் மதிப்பு சரியும் என்று அடடாநீ சுட்டிக்காட்டுகிறது.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-பிப்-202300:47:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "ஐயோ நான் அள்ளிக் கொடுத்த கடன், கியாரண்டி, காண்ட்ட்ராக்ட், வரிசலுகை, கடன் தள்ளுபடி எல்லாம் இப்படி வீணா போகுதே"ன்னு கதறியிருப்பாரா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X