ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாலவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 164 மாணவ - மாணவியர் கல்வி பயில்கின்றனர்.
இவர்களுக்கு தேர்வாய் சிப்காட்டில் உள்ள 'ஜீசன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிட்.,' என்ற தொழில் நிறுவனம் சார்பில், மாணவர்களுக்கு நேற்று, மேஜையுடன் கூடிய 80 நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நிறுவனத்தின் பொது மேலாளர் சந்திரசேகர், மனிதவள துறை மேலாளர் நந்தகுமார் ஆகியோர் மாணவ - மாணவியருக்கு, 3.40 லட்சம் மதிப்பில், மேஜையுடன்கூடிய 80 நாற்காலிகளை வழங்கினர்.
இதில், வட்டார கல்வி அலுவலர்கள் சாது சுந்தர்சிங், கல்பனா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேவதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிதரன், முக்கிய பிரமுகர்கள் ரவிகுமார், மோகன், சத்தியநாராயண், சமூக ஆர்வலர் விஜய் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.