குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 5ம் தேதி நடக்கிறது.
குன்னுாரில், 75 ஆண்டுகளாக உள்ள தந்தி மாரியம்மன் கோவில், ஹிந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்களின் உதவியுடன் கோவில் செப்பனிடப்பட்டது.
நாளை காலை, 8:30 மணிக்கு மகாகணபதி பூஜை, ஹோமங்களுடன் விழா துவங்குகிறது. மதியம், 2:30 மணிக்கு கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து முளை பாலிகை, தீர்த்த குடம், மேள தாளம் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு வந்தடைகிறது.
4ம் தேதி காலை, 8:00 மணிக்கு வி.பி., தெரு சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் யாகசாலையை அடைந்து 'இரண்டாம் யாக வேள்வி பூஜைகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, இரவு 7:30 மணிக்கு யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடக்கின்றன.
5ம் தேதி காலை, 6:00 மணிக்கு 4ம் கால வேள்வி, 9:20 மணியில் இருந்து 10:20 மணிக்குள், யாத்ரா தான சங்கல்பம், விமானம் மற்றும் கொடிமரம், தந்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேம் நடக்கிறது.