கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, சிந்தலகுப்பம் மேம்பாலம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சிப்காட் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், பாஸ்கரன், 35, என்பவரிடம், 1,200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement