திருப்பூர் : திருப்பூர் காங்கயம் ரோட்டில் ஆனந்தா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
திருப்பூரில் 23 ஆண்டாக செயல்பட்டு வரும் ஆனந்தா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் 3வது கிளை, காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில், டாடா ேஷாரூம் அருகே துவங்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா நேற்று காலை நடந்தது. ஜெயபாண்டியன் ரிப்பன் வெட்டி புதிய கிளையைத் திறந்து வைத்தார். ஜெயகுமார், பெருமாள் முன்னிலை வகித்தனர். பல்வேறு முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
கடை நிர்வாகிகள் கிேஷார் ராஜதுரை, பிரதீப் ஆகியோர் கூறியதாவது:
திருப்பூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக, காங்கயம் ரோட்டில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு 5 நாட்களுக்கு அதிரடி சிறப்பு சலுகை விலையில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கீர்த்தி பொன்னி அரிசி 26 கிலோ எடையுள்ள மூட்டை, 1320 ரூபாய்க்கு வாங்கினால், மகாராஜா செக்கு கடலை எண்ணயெ் 2 லிட்டர், 50 கிராம் சக்தி மஞ்சள் துாள் இலவசம். அமுதசுரபி நெய் 200 மி.லி., வாங்கினால் 100 மி.லி.,; இட்லி மாவு ஒரு கிலோவுக்கு ரெடிமேட் இடியாப்பம் ஒரு பாக்கெட் இலவசம்.
அரை கிலோ ஜெயம் பேரீச்சம் பழத்துக்கு கால்கிலோ இலவசம்.அதே போல் பல்வேறு பொருட்களுக்கு ஒன்றுக்கு ஒன்று இலவசம். பல்வேறு பொருட்கள் அதிரடி விலை குறைப்பிலும் கிடைக்கும். இவை அனைத்தும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கிடைக்கம். மேலும் பிரஷ்ஷான காய்கறிகள் அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
வாட்ஸ் ஆப் மூலம் பெறப்படும் ஆர்டர்கள் இலவச டோர் டெலிவரி செய்யப்படும். 89885 87777 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.