உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு, வினோதமான ஒரு வகையான நோய் பரவி வருகிறது.
அவற்றின் உடல் நிறம் மாறி, அச்சமூட்டும் வகையில் காணப்படுகிறது. தோலில் அரிப்பு ஏற்பட்டு, நாய்கள் சொறிந்து கொண்டே இருக்கின்றன.
இதனால், நாய்களின் தோல்கள் உறிந்து போய் உள்ளன. இது, சொறி நோயாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நோயால், நாய்கள் பலமிழந்து சோர்வாக இருக்கின்றன. அவற்றின் மூலம், மனிதர்களுக்கும் தொற்று நோய் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
எனவே, உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை, மருத்துவர்களை கொண்டு ஆய்வு செய்து, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.