க.க.சாவடி : நவக்கரை அருகேயுள்ள சின்னாம்பதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் வினுபிரியா, 27; விதவை. ஒரு குழந்தை உள்ளது. கடந்த, 28ல் ராஜனின் வீட்டிற்கு வந்த ஒரு பெண், தோழியின் திருமணத்திற்கு செல்ல, வினுபிரியாவை அனுப்புமாறு கேட்டபோது, ராஜன் மறுத்துவிட்டார்.
பின் அனைவரும் தூங்கச் சென்றனர். இரவு, 10:00 மணியளவில் வினுபிரியா கழிவறைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர், திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், க.க.சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வினுபிரியாவை தேடுகின்றனர்.