பல்லடம் : பல்லடம் அடுத்த பெரும்பாளி, ஆறாக்குளம் பிரிவு, லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேர சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதை அறிந்த பொதுமக்கள், மீண்டும் அப்பகுதியில் கூடினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பல்லடம் போலீசார், மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இதே நிலை நீடித்தால், பொதுமக்கள் இங்கு வசிக்க முடியாத நிலை ஏற்படும். இதை தடுத்து நிறுத்தாவிட்டால், நாங்களே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்,' என்றனர்.