சென்னை:வில்லிவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமாக மேற்கு மாடவீதியில், 13,767 சதுர அடி, ராஜா தெருவில், 2,200 சதுர அடி, ரெட்டி தெருவில், 5,424 சதுர அடி, சென்னை -- திருவள்ளூர் சாலையில், 1,275 சதுர அடி என, 22 ஆயிரத்து 666 சதுர அடி மனைகள் உள்ளன.
இம்மனைகள், ஐந்து பேருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன. அவர்கள், கோவிலுக்கு வாடகை செலுத்தாமல், உள்வாடகைக்கு விட்டிருந்தனர்.
இதையடுத்து, சென்னை மண்டல இணை கமிஷனர் உத்தரவுப்படி, அறநிலையத் துறை உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மீட்டு, 'சீல்' வைத்தனர்.
மீட்கப்பட்ட கோவிலின் சொத்து மதிப்பு, 20 கோடி ரூபாய் என, அதிகாரிகள் கூறினர்.