மதுக்கரை : மதுக்கரை மரப்பாலம், ராஜேஸ்வரி நகர் பிரிவு அருகேயுள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக, மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,குப்புராஜ் தலைமையிலான தனிப்படையினர் அக்குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிலிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பரமக்குடியை சேர்ந்த, சந்தோஷ்குமார், 23, சுண்டக்காமுத்தூர், வயல் தோட்டத்தை சேர்ந்த முதலாமாண்டு கல்லூரி மாணவர் பூலேந்தன், 22 என தெரிந்தது.அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
எஸ்.ஐ., செந்தில்குமார் புகாரில், மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய பெருமாநல்லூரை சேர்ந்த ஆரோன் என்பவரை தேடுகின்றனர்.