மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி பகுதியில், மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
பத்திரப்பதிவு அலுவலகம், கிளை சிறைச்சாலை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள், இப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
மேலும், செய்யூர், சூணாம்பேடு, சித்தாமூர், பூதுார், வேடந்தாங்கல் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் இருந்து, மதுராந்தகத்திற்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
இதை தவிர்க்கும் விதமாக, நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்ட கடைகளுக்கு, மதுராந்தகம் நகராட்சி, போக்குவரத்து துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில், நேற்று முதல், கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.