கோவை : இ.ம.க., தலைவர் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிந்தது.
கோவை, உக்கடம் - பேரூர் பைபாஸ் ரோட்டிலுள்ள அபார்ட்மென்டில் வசித்து வந்த, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் வீட்டில், 2013, ஏப்.,13ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்புடைய அஸ்கர் அலி, ரஹமத்துல்லா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில், நேற்று சாட்சி விசாரணை நடந்தது. அப்போது புலன் விசாரணை அதிகாரி உட்பட, அரசு தரப்பில் சேர்க்கப்பட்ட, 29 சாட்சிகளிடம் விசாரணை முடிக்கப்பட்டது.இவர்களிடம் எதிர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்கு, வழக்கை, வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்திஆஜரானார்.