* வரவேற்பும், வருத்தமும்!
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ்: ரயில்வேக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, தனி மனித வருமான வரி விலக்கு, 5 லட்சத்தில் இருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்திய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கது.
குறு, சிறு தொழில்களுக்கு வங்கியில் வாங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் அளிக்க, 9,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; போதுமானதாக இல்லை. கடன் வழங்குவதில் வட்டி சதவீதம் குறைப்பு எதிர்பார்ப்பும் அறிவிக்கப்படவில்லை.
//
* மிகவும் வரவேற்கத்தக்கது
தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்க துணை தலைவர் சுருளிவேல்: அரசின் பழைய வாகனங்களை கழித்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளதால், 'ஆட்டோமொபைல்' தொழில் புத்துயிர் பெறும். ஸ்கிராப், இரும்பு பொருட்கள், 'காப்பர்' போன்றவற்றுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய பெரிய நிறுவனங்கள், 45 நாட்களுக்கு கொடுக்கவில்லையேல், அந்த 'பில்'லை பெரிய நிறுவனங்கள் செலவாக எழுத முடியாது. அதற்கு, 30 சதவீத வரி செலுத்த வேண்டிவரும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
எம்.எஸ்.எம்.இ., கடன் வழங்கும் திட்டம் எதுவும் புதிதாக அறிவிக்காதது, ஏற்கனவே இருந்த பல மானியங்கள் முற்றிலுமாக நிறுத்தியது, வங்கி வட்டி சதவீதத்தை குறைக்காதது உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் ஏமாற்றம் அளிக்கிறது.
//
* கூட்டத்தொடரில் எதிர்பார்ப்பு!
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார்:
நாடு முழுவதும் இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் வகையில், 30 புதிய திறன் மையங்கள் உருவாக்கப்படும். பெரு நிறுவனங்கள் தங்களுக்கு வேலை செய்துகொடுத்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கான கட்டணங்களை, அந்த நிதியாண்டுக்குள்ளாகவே கொடுத்து முடிக்காவிட்டால், பெரு நிறுவனங்கள் தங்களுக்கான செலவினங்களை கணக்கில் கொண்டு அதற்கான வரி சலுகைகளை பெறமுடியாது. இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கத்து.
///
* 'யானை பசிக்கு சோளப்பொரி'
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ்:
கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இன்றும் மறையாமல் உள்ளது. குறுந்தொழில் முனைவோர் பெரிதும் எதிர்பார்த்த தொழில் மீதான வங்கிக்கடன் மற்றும் 'கோவிட்' கால கடன்கள் மீதான வட்டி குறைப்பு அறிவிப்பு எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம் தருகிறது.
சிறு குறு நிறுவனங்கள் புத்துயிர் பெற, 9,000 கோடி ஒதுக்கீடு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி கதையாக உள்ளது. கே.ஒய்.சி., நடைமுறைகள் எளிமையாக்குதல் மற்றும் தனி நபர் வருமான வரி விலக்கு, 7 லட்சமாக அதிகரிப்பு போன்றவை வரவேற்கத்தக்கது.
//
* செயல் வடிவம் தேவை!
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் தலைவர் ரவி:
ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என, நிதியமைச்சர் கூறியுள்ளார். அவை விரைந்து செயல் வடிவம் பெற வேண்டும்.
நலிந்துபோன சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தனி 'டிஜிலாக்கர்' முறை உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
வரவேற்பும், வருத்தமும்!
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ்: ரயில்வேக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, தனி மனித வருமான வரி விலக்கு, 5 லட்சத்தில் இருந்து, 7 லட்சம் ரூபாயாக உயர்த்திய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கது.
குறு, சிறு தொழில்களுக்கு வங்கியில் வாங்கப்படும் கடன்களுக்கு உத்திரவாதம் அளிக்க, 9,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; போதுமானதாக இல்லை. கடன் வழங்குவதில் வட்டி சதவீதம் குறைப்பு எதிர்பார்ப்பும் அறிவிக்கப்படவில்லை.
மிகவும் வரவேற்கத்தக்கது
தமிழ்நாடு சிறு, குறு தொழில்கள் சங்க துணை தலைவர் சுருளிவேல்: அரசின் பழைய வாகனங்களை கழித்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளதால், 'ஆட்டோமொபைல்' தொழில் புத்துயிர் பெறும். ஸ்கிராப், இரும்பு பொருட்கள், 'காப்பர்' போன்றவற்றுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய பெரிய நிறுவனங்கள், 45 நாட்களுக்கு கொடுக்கவில்லையேல், அந்த 'பில்'லை பெரிய நிறுவனங்கள் செலவாக எழுத முடியாது. அதற்கு, 30 சதவீத வரி செலுத்த வேண்டிவரும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
எம்.எஸ்.எம்.இ., கடன் வழங்கும் திட்டம் எதுவும் புதிதாக அறிவிக்காதது, ஏற்கனவே இருந்த பல மானியங்கள் முற்றிலுமாக நிறுத்தியது, வங்கி வட்டி சதவீதத்தை குறைக்காதது உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் ஏமாற்றம் அளிக்கிறது.
கூட்டத்தொடரில் எதிர்பார்ப்பு!
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார்: நாடு முழுவதும் இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் வகையில், 30 புதிய திறன் மையங்கள் உருவாக்கப்படும். பெரு நிறுவனங்கள் தங்களுக்கு வேலை செய்துகொடுத்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கான கட்டணங்களை, அந்த நிதியாண்டுக்குள்ளாகவே கொடுத்து முடிக்காவிட்டால், பெரு நிறுவனங்கள் தங்களுக்கான செலவினங்களை கணக்கில் கொண்டு அதற்கான வரி சலுகைகளை பெறமுடியாது. இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கத்து.
'யானை பசிக்கு சோளப்பொரி'
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ்: கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இன்றும் மறையாமல் உள்ளது. குறுந்தொழில் முனைவோர் பெரிதும் எதிர்பார்த்த தொழில் மீதான வங்கிக்கடன் மற்றும் 'கோவிட்' கால கடன்கள் மீதான வட்டி குறைப்பு அறிவிப்பு எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம் தருகிறது.
சிறு குறு நிறுவனங்கள் புத்துயிர் பெற, 9,000 கோடி ஒதுக்கீடு என்பது யானைப்பசிக்கு சோளப்பொரி கதையாக உள்ளது. கே.ஒய்.சி., நடைமுறைகள் எளிமையாக்குதல் மற்றும் தனி நபர் வருமான வரி விலக்கு, 7 லட்சமாக அதிகரிப்பு போன்றவை வரவேற்கத்தக்கது.
செயல் வடிவம் தேவை!
கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கம் தலைவர் ரவி: ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என, நிதியமைச்சர் கூறியுள்ளார். அவை விரைந்து செயல் வடிவம் பெற வேண்டும்.
நலிந்துபோன சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான தனி 'டிஜிலாக்கர்' முறை உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.