சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கவுன்சிலிங், வரும் 7ம் தேதி நடக்கிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் உள்ள, இரண்டு யோகா மருத்துவ கல்லுாரிகளில், 160 பி.என்.ஒய்.எஸ்., இடங்கள் உள்ளன. 17 தனியார் கல்லுாரிகளில், 1,550 இடங்கள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட படிப்புக்கு, 2022 - 23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்தாண்டு இறுதியில் நடந்தது.
இந்நிலையில், கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலர், கல்லுாரிகளில் சேராததால், 421 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றுக்கான சிறப்பு கவுன்சிலிங் 7ம் தேதி, சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றவர்களும், காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.