கடந்த 2022 - 23 பட்ஜெட்டில், விளையாட்டு துறைக்கு 3,062 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2,673 கோடி ரூபாய் நிதியை மட்டுமே விளையாட்டுத் துறை அமைச்சகம் பெற்றுக் கொண்டது. சீனாவில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், விளையாட்டு துறைக்கு 3,397 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த ஆண்டை விட, 723 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.