சென்னை:பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள், சென்னையில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் கலை, ஓவியம், தையல், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாடங்களை நடத்தும் சிறப்பு ஆசிரியர்கள், தற்காலிக அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன், மாதம், 5,000 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தற்போது மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
இந்நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.