வருமானம் அதிகரிக்கும்
மத்திய பட்ஜெட்டின் தொலைநோக்கு பார்வை, ஒழுங்குமுறை, கட்டமைப்பு ஆகியவற்றால் தனி நபர் வருமானம் பெறுபவர்கள் அதிக பலன் அடைவர். இது, ஒவ்வொரு இந்தியரின் தனிநபர் வருமானத்தையும் அதிகரிக்க அடித்தளம் அமைக்கிறது. புதிய தொடக்கத்திற்கான பட்ஜெட்.
- உதய் கோட்டக்
சி.இ.ஓ., கோட்டக் மஹிந்திரா வங்கி
இந்தியாவை உலக சாம்பியனாக்கும்
இந்த பட்ஜெட் இந்தியாவை உலக சாம்பியனாக்கும் பாதையில் எடுத்து செல்லும். இது, உள்நாட்டு உற்பத்திக்கு பெரிதும் ஊக்கமளிக்கிறது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுவதோடு, எளிதாக தொழில் செய்யவும் உதவும்.
- ஹர்ஷ் கோயங்கா
தலைவர், ஆர்.பி.ஜி., எண்டர்பிரைசஸ்
தேவைகளை பூர்த்தி செய்யும்
மத்திய பட்ஜெட், வளர்ச்சி மற்றும் புதிய வேலை வாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. வலுவான பொருளாதார சூழல், நாட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதோடு இலக்குகளை வலியுறுத்தும் பட்ஜெட் இது. சாமானிய மக்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.
- தருண் சாவ்னி
நிர்வாக இயக்குனர், திரிவேணி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
முழுமையான வளர்ச்சி தரும்
இந்தியா, அடுத்த பத்தாண்டுகளில் 'ஸ்டார்ட் அப்' தேசமாக அமையும். இது, தேசத்தின் முழுமையான வளர்ச்சிக்கான பட்ஜெட்.
- ரிதேஷ் அகர்வால்
சி.இ.ஓ., ஓயோ குழுமம்
உற்பத்தி திறனை ஊக்குவிக்கும்
இது, வளர்ச்சிக்கு தேவையான சீரான உத்வேகத்தை அளிக்கும் பட்ஜெட். நம் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு உற்பத்தி திறனையும் ஊக்குவிக்கும். இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- அனில் வர்மா,
சி.இ.ஓ., கோத்ரெஜ்
பல மடங்கு நன்மை தரும்
உலகளாவிய பிரச்னைகள் மற்றும் பொருளாதார சிக்கல்களை இந்தியா ராஜதந்திரத்துடன் கையாள்கிறது.
இந்த பட்ஜெட் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பொருத்தமாக உள்ளது. இது வணிகம், தொழிற்துறை தளவாடத் துறை, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பல மடங்கு நன்மைகளை ஏற்படுத்தும்.
- நிரஞ்சன் ஹிரானந்தானி
துணைத் தலைவர், 'நரெட்கோ'