கடந்தாண்டு - இந்தாண்டு ஒதுக்கீடு விபரம்
மொத்த செலவீனம்
2022: 41 லட்சத்து, 87 ஆயிரத்து 232 கோடி ரூபாய்.
2023: 45 லட்சத்து, 3 ஆயி ரத்து, 97 கோடி ரூபாய்.
மொத்த மூலதன செலவீனம்
2022: 7 லட்சத்து, 28 ஆயிரத்து, 274 கோடி ரூபாய்.
2023: 10 லட்சத்து, 961 கோடி ரூபாய்.
நிதிப்பற்றாக்குறை
2022: 17 லட்சத்து, 55 ஆயிரத்து, 319 கோடி ரூபாய். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதம்.
2023: 17 லட்சத்து, 86 ஆயிரத்து, 816 கோடி ரூபாய் என, மதிப்பிப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதம்.
கடன்
2022: 17 லட்சத்து, 58 ஆயிரத்து, 561 கோடி ரூபாய்.
2023: 17 லட்சத்து, 98 ஆயிரத்து, 603 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்
2022: 23 ஆயிரத்து, 874 கோடி ரூபாய்.
2023: 22 ஆயிரத்து, 118 கோடி ரூபாயாக மதிப்பிடப் பட்டுள்து.
வரி வருவாய்
2022: 30 லட்சத்து, 43 ஆயிரத்து, 67 கோடி ரூபாய்.
2023: நடப்பு நிதியாண்டில் 33லட்சத்து, 60 ஆயிரத்து, 858 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., வருவாய்
நடப்பு நிதியாண்டில், 8 லட்சத்து, 54 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
2023 - 24ல் 9 லட்சத்து, 56 ஆயிரத்து, 600 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய துறை திட்டங்கள்
நடப்பு நிதியாண்டில், 14 லட்சத்து, 11 ஆயிரத்து, 729 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2023 - 24ல் 14 லட்சத்து 67 ஆயிரத்து 880 கோடி ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நலத்திட்ட உதவிகள்
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் நலத்திட்ட உதவிகளுக்கு 4 லட்சத்து, 76 ஆயிரத்து, 105 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 4 லட்சத்து, 51 ஆயிரத்து 901 ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது.
2023 - 24ல் இந்த தொகை 2 லட்சத்து, 34 ஆயிரத்து, 359 கோடி ரூபாயாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவம்
2022: 5 லட்சத்து, 25 ஆயிரம் கோடி ரூபாய்.
2023: 5 லட்சத்து, 94 ஆயிரம் கோடி ரூபாய்.
மானியம் (உணவு, உரம், பெட்ரோலியம்)
2022: 5 லட்சத்து, 21 ஆயிரத்து, 585 கோடி ரூபாய்.
2023: 3 லட்சத்து, 74 ஆயிரத்து, 707 கோடி ரூபாய்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி
நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு 17 லட்சத்து, 10 ஆயிரத்து, 828 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2023 - 24ல் 18 லட்சத்து, 62 ஆயிரத்து, 874 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்
நடப்பு நிதியாண்டில், 89 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
2023 - 24 பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் உற்பத்தி
2022: 2,898 கோடி ரூபாய்.
2023: 5,172 கோடி ரூபாய்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
2022: 6,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
2023: 7,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டம்
கிராமப்புறங்களுக்கு குடிநீர் வசதி வழங்கும் இந்த திட்டத்துக்கு, கடந்த பட்ஜெட்டில் 55 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டில், 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
துாய்மை இந்தியா திட்டம்
2022: 7,000 கோடி ரூபாய்.
2023: 12 ஆயிரத்து, 192 கோடி ரூபாய்.
மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்
2022: 1,885 கோடி ரூபாய்.
2023: 4,200 கோடி ரூபாய்.
மெட்ரோ ரயில் திட்டங்கள்
2022: 15 ஆயிரத்து, 629 கோடி ரூபாய்.
2023: 19 ஆயிரத்து, 518 கோடி ரூபாய்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட், 2022 - 23ம் ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.