பட்ஜெட் உரையை துவக்கியதிலிருந்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன், மொத்தம் 85 நிமிடங்களில், முழுவதுமாக வாசித்து முடித்தார்; இடையிடையே தண்ணீர் அருந்தினாரே தவிர, கடைசி வரை களைப்படையவில்லை.
பட்ஜெட் உரையை நிறைவு செய்து முடித்தவுடன், சபையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார்.

முன் வரிசையைத் தாண்டி, இரு வரிசைகள் பின்னால், நடைபாதை ஓரமாக இருந்த இருக்கை அருகே நின்று, பட்ஜெட் உரையை வாசித்து முடித்து, 'டேப்லட்' உள்ளிட்ட தன் உடைமைகளை கையில் எடுத்தபடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிளம்பத் தயாரானார். முதல் வரிசையில், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி வேகமாக நிர்மலா அருகே சென்று, பட்ஜெட் உரை குறித்து பாராட்டி பேசினார்; ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனார், நிர்மலா!
சில நிமிடங்கள் நீடித்த இந்தப் புகழாரத்திற்கு, கைகூப்பி நான்கைந்து முறை வணங்கி, தலைகுனிந்து நன்றி தெரிவித்தார்!
- நமது டில்லி நிருபர் -