திருச்சி,:துவரங்குறிச்சி அருகே, காட்டெருமை முட்டியதில், பைக்கில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே, தெத்துார் மலையாண்டி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சிவஞானம், 46. விவசாயியான அவர், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக, 'ஸ்பிளண்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
தெத்துார் - மருதம்பட்டி சாலையில், நர்சரி கார்டன் அருகே சென்ற போது, சாலையில், காட்டெருமைகள் சென்றன.
இதனால் பைக்கை ஓரமாக நிறுத்த முயன்ற சிவஞானத்தை, காட்டெருமை ஒன்று மார்பில் முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.