உணவு, உரம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான அரசின் மானியம், நடப்பு நிதியாண்டில் 17 சதவீதம் உயர்ந்து, 5.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 - 2024ம் நிதியாண்டில், 28 சதவீதம் குறைந்து, 3.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் உணவுக்கான மானியம், 2021 - 22ம் நிதியாண்டில், 2.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், 2.87 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அதேநேரத்தில், உர மானியம் கடந்த நிதியாண்டில், 1.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்து, நடப்பு நிதியாண்டில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் மீதான அரசின் மானியம், 3,422 கோடி ரூபாயில் இருந்து, 9,170 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.