வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பழநி:பழநி கோயில் தைப்பூச திருவிழாவில் நாளை வள்ளி- தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா ஜன.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி தந்த பல்லாக்கில் வீதி உலா வருகிறார்.
விழாவின் ஆறாம் நாளான நாளை இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
தைப்பூச திருவிழாவான பிப்.4 காலை தோளுக்கினியானில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல், மதியம் 12:00 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது .
பிப்.7 இரவு 7:00 மணிக்கு தெப்ப தேர் திருவிழாவும் நடக்கிறது.