'சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கார்பன் வெளியேற்றத்தை, 2070க்குள் முற்றிலும் ஒழித்து விடுவோம்' என, பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளன.
பசுமை எரிசக்தி நடைமுறைக்கு மாறவும் , முன்னுரிமையும் அளிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும், தற்போது, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது தான் அரசின் இலக்கு.
பயன்: தொழில் துறையில் கார்பன் எனப்படும், கரியமில வாயுவின் வெளியேற்றத்தை குறைக்கவும், பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்கும் உதவி.