வேலுார்:'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், வேலுாரில் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
முதல் கட்டமாக, வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான ஆய்வுக்கூட்டம், நேற்றிரவு நடந்தது. இதில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்து அவர், நேரடியாக ஆய்வு செய்தார்.
அப்போது விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தொல் பொருள் உற்பத்தியாளர்கள், வணிகர் சங்கம், மொத்த வாணிய சங்கம், பஸ், லாரி
உரிமையாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறுதொழில் நிறுவன அதிபர்கள் பங்கேற்றனர். அதில், அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்த, முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் கலந்துரையாடினார்.