சென்னை:ஆசிரியர்களுக்கான, பி.எட்., சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக திறந்தநிலை பல்கலை சார்பில், 2008ம் ஆண்டு முதல், பி.எட்., சிறப்பு கல்வி பட்டப் படிப்பு, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., மற்றும் இந்திய மறுவாழ்வு கழக அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறது.
இந்த படிப்பை முடிப்பவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற, கல்வி தகுதி பெற முடியும்.
இந்த படிப்புக்கான நடப்பாண்டு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேட்டை, திறந்தநிலை பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க, வரும், 8ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை இணையதளத்திலும், 044-- 2430 6617 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.