மத்திய பட்ஜெட்டில் உள்துறை அமைச்சகத்துக்கு, 1.96 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில், மத்திய ஆயுதப் போலீஸ் படைக்கு 1.27 லட்சம் கோடி ரூபாயும், உள்நாட்டு பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 31 ஆயிரத்து 772 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - வங்கதேச எல்லைகளில் பணியாற்றும் பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு 24 ஆயிரத்து, 771 கோடி ரூபாயும், அணு உலைகள், விமான நிலையங்கள், 'மெட்ரோ' ரயில் நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு 13 ஆயிரத்து 214 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
![]()
|