5.94 lakh crore for the army | மத்திய பட்ஜெட்: ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி| Dinamalar

பட்ஜெட் 2023

POWERED BY

மத்திய பட்ஜெட்: ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (3) | |
மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு, 5.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட்டில் 5.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதைய ஒதுக்கீட்டில் புதிய ஆயுதங்கள், போர் விமானம், போர்க்கப்பல் ஆகியவற்றை வாங்குவது உள்ளிட்ட மூலதனச் செலவிற்கு மட்டும், 1.62 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம், பராமரிப்பு போன்ற வருவாய்
5.94 lakh crore for the army  மத்திய பட்ஜெட்: ராணுவத்துக்கு ரூ.5.94 லட்சம் கோடி

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு, 5.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட்டில் 5.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போதைய ஒதுக்கீட்டில் புதிய ஆயுதங்கள், போர் விமானம், போர்க்கப்பல் ஆகியவற்றை வாங்குவது உள்ளிட்ட மூலதனச் செலவிற்கு மட்டும், 1.62 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil news

சம்பளம், பராமரிப்பு போன்ற வருவாய் செலவினங்களுக்கு, 2.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சகத்துக்கான மூலதன ஒதுக்கீடாக, 8,774 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ராணுவத்தினருக்கான ஓய்வூதியத்துக்காக, 1.38 லட்சம் கோடி ரூபாய் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X