மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு, இந்த பட்ஜெட்டில் 946.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த நிதி ஆண்டைவிட 4.4 சதவீதம் அதிகமாகும்.
'கிரிப்டோகரன்சி, டார்க்நெட்' உள்ளிட்ட பல்வேறு மோசடி தொடர்பான குற்றங்களை விசாரிக்கும், நம் நாட்டின் முதன்மையான புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ., அமைப்பின் வளர்ச்சிக்கு, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்கள், தனியார் நபர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் விசாரணை செய்வதற்கான செலவினங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
![]()
|
அது மட்டுமின்றி, சி.பி.ஐ.,யின் பயிற்சி மையங்களை நவீன மயமாக்குதல், தொழில்நுட்ப மற்றும் தடயவியல் ஆதரவு பிரிவுகளை நிறுவுதல், அதை நவீனமயமாக்கலுடன் விரிவாக்கம் செய்தல் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலம், அலுவலகம், குடியிருப்பு போன்றவற்றை வாங்குதல் போன்ற நிறுவன திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் இதில் அடங்கும்.
கடந்த 2022 - 23 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில், சி.பி.ஐ.,க்கு 911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 906.59 கோடி ரூபாய் ஆக குறைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 946.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.