'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் வருமான வரிச் சலுகைகளை பெற கால வரம்பு, மார்ச் 2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் தொடக்க நிறுவனங்களுக்கு வருமான வரிச் சலுகைகளை இணைக்கும் தேதியை மார்ச் 31, 2023 முதல் மார்ச் 31, 2024 வரை நீட்டிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் இழப்பின் பலனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
![]()
|
மேலும், சர்க்கரை கூட்டுறவு சங்கங்கள், கரும்பு விவசாயிகளுக்கான 2016- - 17ம் ஆண்டுக்கு முந்தைய தொகையை செலவாகக் கோரலாம். மார்ச் 2024 வரை உற்பத்தி நடவடிக்கைகளை துவங்கும், புதிய கூட்டுறவு நிறுவனங்களுக்கு குறைந்த வரி விகிதமாக 15 சதவீதம் வழங்கப்படும்.
முதன்மை வேளாண்மை கடன் சங்கங்களின் ரொக்க வைப்பு மற்றும் கடன், உறுப்பினர்
ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும்.