ரயில்வேக்கு, 2.60 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்த செலவினங்களுக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய்; நிர்பயா நிதியின் கீழ், ௨௦௦ கோடி ரூபாய்; உள் ஆதாரங்கள் வாயிலாக ௩,௦௦௦ கோடி ரூபாய்; மற்ற வகைகளில் ௧௭ ஆயிரம் கோடி ரூபாய் என, ஒட்டுமொத்தமாக, ரயில்வேக்கு, ௨.௬௦ லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு கிடைக்கும்.
நிலக்கரி, உரம், உணவு தானியங்கள் கையாள்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, ௭௫ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
![]()
|
பயணியரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, ஹம்சபர், தேஜஸ் ரயில்களின், 1,000 பெட்டிகள் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளன.
'வந்தே பாரத்' ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக, ரயில் பாதைகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு, 17.24 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பீடாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement